முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு ஆத்மா சாந்திப்பூஜை வழிபாடுகள்!

தமிழ் விருட்சம் அமைப்பு, கருமாரி அம்மன் ஆலய பரிபாலனசபை, மற்றும் அந்தணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கான  ஆத்மா சாந்திப்பூஜை வழிபாடுகள் வுனியா கருமாரி அம்மன் ஆலயத்தில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்றது.

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ பிரபாகர குருக்கள் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உயிரிழந்தவர்களுக்காக விசேட பூஜை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், அதனை தொடர்ந்து  நெய் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி,சிவமோகன், வினோநோகராதலிங்கம், வவுனியா நகரசபை உறுப்பினர் ஜானுயன், தமிழருவி சிவகுமாரன்,   சமூக ஆர்வலர்கள், அந்தணர் ஒன்றிய தலைவல் குகநாதகுருக்கள், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ். சந்திரகுமார்,  உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேவளை குறித்த நிகழ்வில் பொலிசார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன், சமூக இடைவெளியை பின்பற்றுமாறு ஆலய பரிபாலசபையினரிடம் தெரிவித்திருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.