சமூக வலைத்தளங்களில் அனர்த்தங்கள் தொடர்பாக பொய்யான வதந்திகள் பரப்புபவர்களுக்கு நடவடிக்கை
பாறுக் ஷிஹான்
சமூக வலைத்தளங்களில் அனர்த்தங்கள் தொடர்பாக பொய்யான வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றது. அரச மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்களினால் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மாத்திரம் மக்கள் நம்ப வேண்டும் .எனவே போலி தகவல்களை பரப்பும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி. முகம்மட் றியாஸ் தெரிவித்தார்.
தற்பொழுது கிழக்கு மாகாணத்தின் கடற்கரையை அண்டிய பல பிரதேசங்களில் கிணறுகள் வற்றுவதாகவும் இதனால் சுனாமி அபாயம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் மக்கள் தெரிவித்து வருகின்ற நிலையில் சனிக்கிழமை(16) இது தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.
தென் பகுதியில் மழைக்காலம் ஆரம்பிக்கப்பட்டுள்ள காரணமாக அங்கு தாழமுக்கம் ஏற்பட வாய்ப்புண்டு ஆகவே கடல் கொந்தளிப்பு ஏற்படுவது வழமை இது கரையோர பிரயோக மக்களுக்கான பயிற்சியாகும் அமைகிறது .சமூக வலைத்தளங்களில் பொய்யான வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றது. அரச மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்களினால் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மாத்திரம் மக்கள் நம்ப வேண்டும் . போலி தகவல்களை பரப்பும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் .
அரசாங்க அதிபரின் ஆலோசனைகளை பெற்று திணைக்களங்களை ஒன்றிணைத்து மாவட்ட செயலகத்தில் ஆலோசனை கூட்டங்களை நடார்த்தி வருகின்றோம் பிரதேச செயலகங்களுடன் அடிக்கடி தொடர்பை ஏற்படுத்தி தயார் நிலையில் கொரோனா அனர்த்த காலத்தில் செயற்பட்டு வருகின்றோம்.குறித்த பகுதியில் பயிற்சிகள் அதேபோல ஒத்திகைகள் இந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது கடந்தகால மூன்று நான்கு தடவைகள் இவ்வாறான முழுமையாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தால் ஒத்திகைகள் வழங்கியிருக்கின்றோம்.
பெரிய கல்லாறு இமருதமுனை கல்முனை சாய்ந்தமருது போன்ற பகுதிகளில் இவ்வாறான முன்னெச்சரிக்கை கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதனூடாக அவசரகால சூழ்நிலையை ஏற்படுகின்ற போது நேரடியாக இயங்க கூடிய வல்லமை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.அதேபோன்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு மாவட்ட உதவிப்பணிப்பாளர் தொடர்பு கொள்ளக்கூடிய 77 3957883 இலக்கத்தினூடாக தொடர்புகளை ஏற்படுத்தி அதற்கான விளக்கங்களை பெற்றுக்கொள்ளலாம் . மாத்திரமல்ல முப்படையினரும் ஒரு சூழ்நிலை வருகின்ற பொழுது கடற்கரை பிராந்தியங்களில் மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கின்ற சந்தர்பத்தில் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். அவ்வாறான எந்த ஒரு நடவடிக்கைகள் இல்லாத நேரத்தில் மக்கள் பீதி அடைவது கவலை அளிக்கிறது.
2004 சுனாமி ஏற்பட்டதன் பின்பு மக்களுக்கு தொடர்ந்தேச்சியாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம். இருந்த போதிலும் மக்கள் இதை பொருட்படுத்தாது பீதியடைகின்றமைக்கு காரணம் மக்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியை கிரகித்து செயற்படாமையையே காரணம்.எதிர்காலத்தில் மக்கள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் செயற்பாடுகளை கிரகித்து செயற்படுவார்களாயின் அவர்களது உயிர்ச் சேதங்கள் அல்லது சொத்து இழப்புகள் இபோன்ற சந்தர்பத்தை கட்டுப்படுத்தலாம் .
கடல் கொந்தளிப்பு சம்பந்தமாக கிழக்கு பிராந்தியத்தில் குறிப்பாக 50 – 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்ற அடிப்படையில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது இதனை மீன்பிடி சங்கங்கள் பிரதேச செயலகங்களூடாக தெரியப்படுத்தி வருகின்றோம் என கூறினார்.

கருத்துக்களேதுமில்லை