சுகாதார நடவடிக்கையினூடாக கல்வித்துறையினை முன்னெடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் சிறப்பாக நடத்தலாம்
சுகாதார நடவடிக்கையினூடாக கல்வித்துறையினை முன்னெடுப்பதன் மூலம் இலங்கையில் முடக்கப்பட்டு இருக்கின்ற கல்வி நிலைமையை எதிர்காலத்தில் சிறப்பாக நடத்தலாம் என என கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனை பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.
கல்முனையில் அமைந்துள்ள கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனையில் சனிக்கிழமை(16) மாலை இடம்பெற்ற ஊடகசந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் தனது கருத்தில்
இலங்கையை மீள்திறப்போம் என்ற அடிப்படையில் அரசு எடுத்துக் கொண்டு இருக்கின்ற பல நடவடிக்கைகளில் ஒரு அங்கமாக கல்வித் திணைக்களங்கள் கற்பித்தல் கற்றல் நடவடிக்கைகள் பாடசாலைகளை திறப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றது
தற்போதைய நிலையில் பாடசாலைகளை தயார்படுத்தி வைத்திருப்பது தான் முதன்மையான நோக்கமாக காணப்படுகின்றது இதன் அடிப்படையில் நேற்று கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஜனாப் மன்சூர் அவர்களின் தலைமையில் கல்முனையில் ஒரு கூட்டம் ஒன்று நடைபெற்றது
அதில் சகல வலயக் கல்விப் பணிப்பாளர்கள் பாடசாலைகளின் அதிபர்கள் கலந்து கொண்டு பாடசாலைகளை திறந்து எதிர்காலத்தில் கல்வி நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது தொடர்பான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது அந்த அடிப்படையில் ஆராயப்பட்டது.
நாட்டில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்ற கொரோனா வைரஸ் இரண்டு மாதங்களாக நாங்கள் எடுத்துக்கொண்ட அயராத முயற்சியின் பலனாக ஏற்பட்டதாகும்.
கடந்த இரண்டு மாதங்களாக முடக்கப்பட்ட நிர்வாகங்கள் நாங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டியவர்களாக இருக்கின்றோம் இலங்கையை மீள்திறத்தல் என்ற அடிப்படையில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு கலந்துரையாடல்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது அதற்காக சுகாதாரம் கல்வி அமைச்சும் இணைந்து செயற்படுகின்றன.
இந்தப் பாடசாலைகள் ஆரம்பிக்கின்ற போது மாணவர்களின் நிலைமை இப்படி இருக்க வேண்டும் அல்லது ஆசிரியர்கள் அல்லது கல்விப் பணிப்பாளர்கள் பாடசாலையின் அடிப்படை வசதிகள் காணப்பட வேண்டும் என்பது பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது
அதை தவிர இந்த பாடசாலைகளை ஆரம்பிக்கின்ற போது பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்களையும் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் நாட்களில் கல்வி கற்பிப்பது தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன
அதை தொடங்குவது எப்படி எவ்வாறு மாணவர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட வேண்டும் அந்த மாணவர்களுக்கு இடையேயான தூரங்கள் அந்தப் பகுதிகள் வழியாக சமூக இடைவெளி என்பது நிச்சயமாக கடைபிடிக்கப்பட வேண்டும் மாணவர்களின் உடல்கள் பாடசாலையில் பலவிதமாக தவிர்க்கப்பட வேண்டிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
இதில் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் குழுவாக செயல்பட்டு தீர்மானங்களை எடுக்க வேண்டியவர்களாக கல்வித்துறையினர் காணப்படுகிறார்கள்
இப்படியான முன்னெடுப்பதன் மூலம் இலங்கையில் முடக்கப்பட்டு இருக்கின்ற இந்த கல்வி நிலைமையை எதிர்காலத்தில் சிறப்பாக நடத்தலாம் என்றார்.
—
0779008012
sihanfarook@yahoo.com, sihanfarook@gmail.com,
பாறுக் ஷிஹான்
0779008012,0719219055,
கருத்துக்களேதுமில்லை