ஜூலை மாத தொடக்கத்தில் சுற்றுலாத்துறை மீண்டும் ஆரம்பம்

சுகாதார அமைச்சு பச்சைக்கொடி காட்டினால் சுற்றுலாத்துறையினை ஜூலை மாத தொடக்கத்தில் மீண்டும் ஆரம்பிக்க முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் ஏற்பட்டால் ஜூலை மாதத்திலேயே சுற்றுலாப் பயணிகளின் வருகை ஆரம்பிக்க கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதன்படி ஆயுர்வேத சிகிச்சைகளுக்காக வருபவர்கள் போன்ற நீண்டகால சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க அமைச்சு முடிகற்கட்டமாக நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆயுர்வேத சிகிச்சைகளுக்காக வரும் சுற்றுலாப் பயணிகள் பொதுவாக பல மாதங்கள் தங்கியிருப்பார்கள். எனவே அவர்களை கட்டாய தனிமைப்படுத்த இலகுவாக இருக்கும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை சுற்றுலா பயணிகளின் வருகைக்கு முன்னும் பின்னும் ஒரு கட்டாய பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்