வவுனியாவில் முள்ளிவாய்க்கால் பேரவல 11ம் ஆண்டு நினைவேந்தல்!!
வவுனியாவில் முள்ளிவாய்க்கால் பேரவல 11ம் ஆண்டு நினைவேந்தல்!!
முள்ளிவாய்க்கால் பேரவல 11 ம் ஆண்டு நினைவேந்தல் வவுனியா குட்சைட் வீதியில் அமைந்துள்ள கருமாரி அம்மன் ஆலயத்தில் இன்று (18.05.2020) காலை 7.30 மணியளவில் இடம்பெற்றது.அந்தனர் ஒன்றியம் , ஆலய நிர்வாகத்தினர் , தமிழ்விருட்சம் அமைப்பினர் இணைந்து நடாத்திய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் முள்ளிவாய்க்காலில் அநியாயமாக கொல்லப்பட்ட உறவுகளின் ஆத்ம சாந்திக்கு விசேட பூசை இடம்பெற்றதுடன் முள்ளிவாய்க்கால் மு என்ற எழுத்து வடிவில் நெய்தீபம் ஏற்றி வழிபடும் நிகழ்வும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.
இவ் நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான வினோதரலிங்கம் , சிவமோகன் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் , தமிழ் விருட்சம் அமைப்பினர் , ஆலய குருக்கள்கள் , நகரசபை உறுப்பினர் , வர்த்தகர்கள் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கருத்துக்களேதுமில்லை