யோகேஸ்வரனால் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன்  இன்று மாலை முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
 வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் அரசியல் பணிமனையில் இன்று மாலை    முள்ளிவாய்க்கால்  யுத்தத்தின் போது இனப்படுகொலை செய்யப்பட்ட பொது மக்களின் ஆத்ம சாந்தி வேண்டி சுடர் ஏற்றப்பட்டு விசேட பூசை நடைபெற்றது.
 இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு காரியாலயத்தில் நடைபெற இருந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாளை அனுஷ்டிப்பதற்கு பொலிஸாரினால் நீதிமன்ற தடை உத்தரவு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
2009 மே மாதம் 18 அன்று யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின் வடக்கு, கிழக்கு பகுதியில் பெரும் இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் 2010ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட எனது தலைமையில் மட்டக்களப்பு மாமாங்கேசுவரர் ஆலயத் தீர்த்தக்கேணியில், முள்ளிவாய்க்காலில் மரணித்த தமிழ் உறவுகளுக்கான பிதிர்க்கிரிகைகளும், அன்னதான நிகழ்வும் நடைபெற்றது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான திரு. பொன். செல்வராஜா மற்றும் திரு. பா. அரியநேந்திரன் ஆகியோர் இணைந்தே இதனை மேற்கொண்டனர்.
அதன்பின், வருடாந்தம் மே 18 இல் அஞ்சலி செலுத்தும் செயற்பாட்டை இவர்கள் மேற்கொண்டு வந்தனர். 2014ம் ஆண்டளவில் பிரித்தானிய சைவத்திருக்கோயில் ஒன்றியத்தின் அனுசரணையில் இந்தியாவின் வாரணாசி காசிக் கங்கைத் திர்த்தக்கரையில் மே 18 இல் முள்ளிவாய்க்காலில் உயிர்நீர்த்த எமது தமிழ் உறவுகளுக்கான மாபெரும் பிதிர்க்கிரிகைகள் மாணிக்கவாசகர் சுவாமிகள் ஆதினத்தால் நடாத்தப்பட்டது.
இக்கிரிகைகளுக்கு சென்று தலைமையேற்று நடாத்தி வைத்தேன். பெருந்தொகையான துறவிகளுக்கும், பெருந்தொகையான அந்தணர்களுக்கும் தானம் வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து வருடாந்தம்  அஞ்சலி செலுத்தும் நிகழ்வை நடாத்தி வருகின்றேன் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன்  தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.