பீற்றர் இளஞ்செழியன், ரவிகரன், சிவாஜிலிங்கம் ஆகியோர் மீதான வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பிரமுகர் அ.ஜெ.பீற்றர் இளஞ்செழியன்,வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பிர்களான மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்கள்மற்றும் மதிப்புறு எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் அன்னலிங்கம் மீதான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி, முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் இடம்பெற்ற காணிவிடுவிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பிரமுகர்  அ.ஜெ.பீற்றர் இளஞ்செழியன்  வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன், அ. சண்முகலிங்கம் அவர்களை கைது செய்த முல்லைத்தீவு காவற்றுறையினர், அவர்களுக்கு எதிராக, வழக்கு தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணைகளையடுத்து மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இதேவேளை, வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன் பிணைகோரி, சட்டத்தரணி ஊடாக பிணையில் வெளிவந்தார்.
இந் நிலையில் சுமார் இரண்டுவருடங்களுக்கு மேலாக இந்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், 18.05.2020 இன்றைய நாள் குறித்த வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தன.
இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணைகளில்  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பிரமுகர்  அ.ஜெ.பீற்றர் இளஞ்செழியன்  முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன்அவர்கள், மற்றும் அ.சண்முகலிங்கம் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
அதேவேளை முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் மன்றிற்கு முன்னிலையாகியிருக்கவில்லை.
இந் நிலையில் குறித்த வழக்கு விசாரணைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக இன்றையநாள் நீதிமன்று அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.