கோட்டாபய தலைமையில் இன்று போர் வெற்றி விழா! – 14 ஆயிரத்து 617 இராணுவத்தினருக்குப் பதவி உயர்வு

போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 11 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் 11ஆவது போர் வெற்றி விழாவை சிங்கள தேசம் இன்று கொண்டாடுகின்றது. இந்த விழா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நாடாளுமன்றத்துக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள தேசிய  இராணுவ வீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெறுகின்றது.

இன்றைய போர் வெற்றி விழாவில் 14 ஆயிரத்து 617 இராணுவத்தினருக்குப் பதவி உயர்வுகளும் வழங்கப்படவுள்ளன.

இலங்கையில் இராணுவ  வரலாற்றில் இடம்பெற்றுள்ள  பதவி உயர்வு  நிகழ்வுகளில்  ஒரு நாளில் அதிக இராணுவத்தினருக்குப் பதவி உயர்வு வழங்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

நாட்டின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இராணுவத்தினருக்கு வழங்கும் கௌரவமாக இந்தப் பதவி உயர்வுகளை வழங்க வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வழமையாக இராணுவ அணிவகுப்புகள், போர் நினைவு நிகழ்வுகள் என விமர்சையாக போர் வெற்றி விழா கொண்டாடப்பட்டாலும்கூட, கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக சமூக ஒன்றுகூடல் குறித்த அச்சுறுத்தல் காணப்படும் நிலையில் ஆடம்பரமில்லாது அமைதியான முறையில்  போர் வெற்றி விழா கொண்டாடப்படும் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.