வாகனதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

ஸ்ரீலங்காவில் ஐ ஓ சி எரிபொருள் விலை அதிகரிப்பினை மேற்கொண்டுள்ள நிலையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்கப்போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

சர்வதேச அளவில் எரிபொருட்களின் விலை குறைவடைந்துள்ள போதிலும் அரசாங்கம் எரிபொருள் விலையில் அதிகரிப்பை செய்வதற்கு தீர்மானித்துள்ளது என சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் போலியானவை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐஓசி தனது சொந்த முடிவின் அடிப்படையிலேயே விலையதிகரிப்பை செய்தது அரசாங்கத்தின் தலையீடு எதுவுமில்லை என அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஐ ஓ சி யில் எரிபொருள் விலை அதிரிப்பு என்றால் அரசால் நடத்தப்படும் எரிபொருள் நிலையங்களுக்கு மக்கள் செல்ல முடியுமென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.