காரைதீவில் கடல் சீற்றத்தினால் கடற்தொழிலாளர்கள் பாதிப்பு…
19/05/2020 இன்று அதிகாலை காரைதீவு கடற்கரை அண்டிய பகுதிகளில் கடல் அலையின் வேகத்தினால்
கடற்கரை விதிகளைத் தாண்டி தண்ணீர் பரவுவதினால் கடற் தொழில் உரிமையாளர்கள் தமது தோணி,படகுகளை விதிகளுக்கு அப்பால் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளமை காணக்கூடியதாக இருந்தது.
மேலும் நிந்தவூர் பகுதிகளிலும் பல இடங்களில் கடல் நீர் குடியிருப்புகளுக்குள் செல்வதனையும் இதனால் குடிசை ஒன்றும் முற்றாக சேதமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை