மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கு அரியநேத்திரன் தலைமையில் வணக்கநிகழ்வு இடம்பெற்றது…

மட்டக்களப்பில் இலங்கைதமிழரசுகட்சி பணிமனையி முள்ளிவாய்க்கால் 11ம் ஆண்டு நினைவு நடத்துவதற்கு நீதிமன்றம் தடைவிதித்ததை அடுத்து உடனடியாக
இலங்கை தமிழரசுகட்சியின் பட்டிருப்பு தொகுதி தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன் மட்டுநகரில் வேறு ஒரு இடத்தில் சென்று தமிழ்தேசியகூட்டமைப்பின் சார்பில் முள்ளிவாய்க்கால் 11,ம் ஆண்டு நினைவுவணக்கத்தை மே18ம் நாள் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்வில் மண்முனைவடக்கு இலங்கை தமிழரசுகட்சி தலைவரும் மாநகரசபை உறுப்பினருமான வே.தவராசா, இலங்கை தமிழரசுகட்சி மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணி தலைவர் லோ.திவாகரன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பா.அரியநேத்திரன் எத்தனை தடைகள் வந்தால் உயிர்நீத்த எம் உறவுகளை நினைத்து விளக்கேற்றி அச்சலி செலுத்துவதை எவராலும் தடுக்கமுடியாது என கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.