தேர்தலை நடத்துவதற்கான பரிந்துரைகளை வழங்க சுதந்திரக் கட்சி தீர்மானம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இடையில் 2020 பொதுத் தேர்தளை நடத்துவது குறித்த பரிந்துரைகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முடிவு செய்துள்ளது.

அந்தவகையில் குறித்த பரிந்துரைகள் அடங்கிய கடிதத்தை ஆணைக்குழுவிடம் கையளிக்க தீர்மானித்துள்ளதாக சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனாவின் தலைமையில் நேற்று நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவிருந்த பொதுத் தேர்தல் 2020 ஜூன் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் தேர்தலை நடத்துவதற்கான புதிய திகதியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பல அடிப்படை உரிமைகள் மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.