பெண்களின் நடவடிக்கைகள் கவலையளிக்கிறது….

 

(எச்.எம்.எம்.பர்ஸான்).

கொரோனா பாதிப்பிலிருந்து தற்காலிகமான சுமூக நிலை ஏற்படுத்தப்பட்டுள்ள இச் சந்தர்ப்பத்தில் கல்குடா பிரதேச மக்களின் செயற்பாடுகள் குறிப்பாக பெண்களின் நடவடிக்கைகள் கவலையளிக்கிறது என்று கல்குடா ஜூம்ஆப் பள்ளிவாயல் கூட்டமைப்பு அறிக்கையொன்றை விடுத்துள்ளது.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டில் கொரோனா வைரஸ் பரவியுள்ள இக் காலப்பகுதியில் தமிழ், சிங்கள, மக்கள் தத்தமது பெருநாட்களை வீடுகளில் அமைதியாகக் கொண்டாடி கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ள அதே சமயம், எமது மக்கள் அவ்வாறான ஒத்துழைப்புக்களை இப்பெருநாளில் வழங்குவார்களா என்ற சந்தேகம் தோன்றியுள்ளது.

இந் நிலையைக் கருத்திற்கொண்டு கல்குடா ஜூம்ஆப் பள்ளிவாயல் கூட்டமைப்பு பின்வரும் வேண்டுகோள்களை மக்கள் மத்தியில் வினயமாக முன்வைக்கின்றது.

வீதிகளிலும் கடைத்தெருக்களிலும் வேறு பிரதேசங்களிலும் புத்தாடைக் கொள்வனவுக்காக நடமாடுவதை, குறிப்பாக பெண்கள் தவிர்ந்து கொள்ளல்.
கடை உரிமையாளர்கள் கூட்டங்கூட்டமாக பொது மக்களை கடைகளுக்குள் அனுமதிக்காது, சமூக இடைவெளியைப்பேணி, சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்றல்.

எனவே, இக் காலப்பகுதியில் கட்டுப்பாட்டுடனும் சுகாதார விதி முறைகளைப்பேணி வாழ்வதற்கும் தேவையற்ற கொள்வனவுகளைக் குறைத்து, அவற்றை ஏழை, எளிய மக்களுக்கு தர்மம் செய்து புனித ரமழான் மாதத்தை கண்ணியப்படுத்தி நடந்து கொள்ளல்.

எதிர்வரும் நோன்புப்பெருநாள் காலங்களில் ஒன்று கூடுவதைத் தவிர்ந்து, நாட்டுக்கு முன்மாதிரியாக அமைதியான முறையில் வீடுகளில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றி மார்க்க வரம்புகளைப் பேணி அனுஷ்டித்தல். போன்ற விடயங்களை கடைப்பிடிக்குமாறு குறித்த அறிக்கையில் பொதுமக்களை கல்குடா ஜூம்ஆப் பள்ளிவாயல் கூட்டமைப்பு கொண்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.