மன்னாரில் முன்னாள் போராளிகள் மக்கள் அமைப்பினருக்கும் மாவை சேனாதிராஜாவிற்கும் இடையில் விசேட சந்திப்பு
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கும் முன்னாள் போராளிகள் மக்கள் அமைப்பினருக்கும் இடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 12 மணியளவில் விசேட சந்திப்பு இடம்பெற்றது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் முன்னாள் போராளிகள் மக்கள் அமைப்பின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது சமகால நிலவரம் தொடர்பாக நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. கலந்துரையாடலின் பின்னர் போராட்டத்தை விமர்சித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிரான கண்டன அறிக்கையினை முன்னாள் போராளிகள் மக்கள் அமைப்பினர் கையளித்தனர்.
இதேவேளை குறித்த கண்டன அறிக்கையினை தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனிடமும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை