இரத்தினபுரியில் மண்சரிவு: இரண்டு பேர் பரிதாபச் சாவு – வெள்ள அபாயத்தால் மக்கள் இடம்பெயா்வு…

இரத்தினபுரியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் அதில் புதையுண்டு பெண்ணொருவரும் குழந்தை ஒன்றும் உயிரிழந்துள்ளதாக மாவட்ட செயலாளர் மாலினி லோகுபோதகம தெரிவித்துள்ளார்.

பெல்மடுல்ல பகுதியில் ஒரு பெண்ணும், அலுகால பகுதியில் ஒரு குழந்தையும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, களு கங்கை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனா்.

இரத்தினபுரியில் மழை, வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட இயற்கை அனா்தங்களை அடுத்து எந்தவொரு அவசரநிலையையும் எதிர்கொள்ள ஆயுதப்படையினா் மற்றும் மீட்புக் குழுவினா் ஆகியோர் தயாா் நிலையில் உள்ளதாக மாவட்ட செயலாளர் மேலும் கூறியுள்ளாா்.

அதிக ஆபத்துள்ள பகுதிகளிலுள்ள மக்களை இடைத்தங்கல் முகாம்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ள அவா், அதிகரித்து வரும் வெள்ள நீர் குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்குமாறும் மக்களைக்  கேட்டுக்கொண்டுள்ளாா்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.