தங்கவேலாயுதபுரம் பகுதியில் உள்ள அரசகாணி தொடர்பிலான உண்மைக்கு புறம்பான செய்திகளே சமூக வளைத்தளங்களில் வெளியானது – மு.பா.உ.கோடீஸ்வரன்…
வி.சுகிர்தகுமார்
திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தங்கவேலாயுதபுரம் பகுதியில் உள்ள அரசகாணி தொடர்பிலான செய்திகள் சமூக வளைத்தளங்களிலும் முகநூல்களிலும் வெளியானதை தொடர்ந்து குறித்த பகுதிக்குச் சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் நிலமை தொடர்பில் நேரில் கண்டறிந்தார்.மேலும் தவறான உண்மைக்கு புறம்பான செய்திகளே சமூக வளைத்தளங்களிலும் முகநூல்களிலும் வெளியானதாகவும் இது தொடர்பான தகவல்களை பிரதேச செயலாளரிடம் இருந்து அறிந்து கொண்டதாகவும் கூறினார்.
குறித்த பகுதிகளுக்கு பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் உள்ளிட்டவர்களை அழைத்துச் சென்ற அவர் அங்குள்ள காணிகள் யாவும் அரசுக்கு சொந்தமானது என்பதுடன் கிராம சக்தி நிகழ்ச்சி திட்டத்தின் மூலம் விவசாயத்தை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளை பிரதேச செயலாளர் மேற்கொண்டு வருவதையும் அறிந்து கொண்டார்.
இதனடிப்படையில் இங்குள்ள காணிகளை பொதுமக்களுக்கு வழங்கி மரவள்ளி செய்கை மற்றும் கஜூ தேனிவளர்ப்பு போன்ற திட்டங்களை உலக வங்கியின் நிதி ஈட்டத்தின் ஊடாக மேற்கொள்ள பிரதேச செயலாளர் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.அத்தோடு குறித்த காணிகள் வேறு பிரதேசத்தவருக்கோ அல்லது வேற்று இனத்தவருக்கோ வழங்கப்படமாட்டாது எனவும் பிரதேச செயலக தகவல்கள் மூலம் அறிந்து கொண்டோம் என்றார்.
மேலும் குறித்த பகுதியில் உள்ள 25ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் விவசாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்களுக்கே வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த திட்டத்தினை முன்னெடுத்துவரும் பிரதேச செயலாளருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் எதிர்காலத்தில் கிராம சக்தி நிகழ்ச்சித்திட்டத்தினூடாக விவசாயத்தில் புரட்சியை எற்படுத்த முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
இதேநேரம் அரச காணிகளை அரசகாணி சட்டத்திற்கு முரணாக பொருத்தமற்ற நபர்களுக்கு வழங்க தம்மால் எந்தவொரு ஏற்பாடும் செய்யப்படவில்லை என பிரதேச செயலாளர் அறிக்கை மூலம் தகவல் வெளியி;ட்டார்.
குறித்த விடயம் தொடர்பில் தவறான உண்மைக்கு புறம்பான செய்திகளே சமூக வளைத்தளங்களிலும் முகநூல்களிலும் வெளியானதாகவும் இது தொடர்பில் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த வேண்டியது தமது பொறுப்பு எனவும் அறிக்கையினூடாக சுட்டிக்காட்டினார்.
கருத்துக்களேதுமில்லை