படையினர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் சர்வதேசத்தின் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை மீளப்பெறத் தயங்கேன்! – போர் வெற்றி விழாவில் கோட்டா எச்சரிக்கை

“எந்தவொரு சர்வதேச அமைப்பும் தொடர்ந்து நம் நாட்டையும் நமது போர் வீரர்களையும் குறிவைத்து, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்தினால், இலங்கையை அத்தகைய அமைப்புகளிலிருந்தோ அல்லது ஸ்தாபனங்களில் இருந்தோ மீளப்பெற பெற நான் தயங்க மாட்டேன்.”

– இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று மாலை நடைபெற்ற இராணுவ போர் வெற்றி  விழாவில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சக்திவாய்ந்த நாடுகளின் தலைவர்கள்கூட தங்கள் போர் வீரர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்க யாரையும் அனுமதிக்க மாட்டார்கள் என்று உறுதியாகக் கூறியுள்ளனர்.

இதுபோன்று, எங்களைப் போன்ற ஒரு சிறிய நாட்டில், இவ்வளவு தியாகங்களைச் செய்த நம்முடைய போர்வீரர்கள் மீது தேவையற்ற அழுத்தம் கொடுக்கவும் துன்புறுத்தவும் நான் அனுமதிக்க மாட்டேன். எந்தவொரு சர்வதேச அமைப்பும் தொடர்ந்து நம் நாட்டையும் நமது போர்வீரர்களையும் குறிவைத்து, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்தினால், இலங்கையை அத்தகைய அமைப்புகளிலிருந்தோ அல்லது ஸ்தாபனங்களில் இருந்தோ மீளப்பெற பெற நான் தயங்க மாட்டேன்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.