கனடா தென்மராட்சி மக்கள் அபிவிருத்தி நிறுவனம் சிகை ஒப்பனையாளர் குடும்பங்களுக்கு உலருணவு!

கொரோனா தாக்கத்தால் பல்வேறு தொழில் புரியும் குடும்பங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. அந்தவகையில் சிகை ஒப்பனையாளர்களின் குடும்பங்கள் இந்த நோயின் தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

தென்மராட்சி பிரதேசத்தைச் சேர்ந்த சிகை ஒப்பனையாளர்களின் குடும்பங்களின் விவரங்களை  கனடா தென்மராட்சி மக்கள் அபிவிருத்தி நிறுவனம் (TPDF Canada) , தென்மராட்சி பிரதேச செயலகம் ஊடாக  பெற்று அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை மேற்கொண்டுள்ளது.

இந்த உதவித் திட்டத்தில் தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள 283 சிகை ஒப்பனையாளர்களின் குடும்பங்கள் பயன்பெற்றுள்ளன. தென்மராட்சி மக்கள் அபிவிருத்தி நிறுவனம் ஊடாகப் பல நல்லுள்ளங்கள் இந்த அளப்பெரும் சேவைக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன. அந்த கொடையாளர்களின் விவரங்கள் தென்மராட்சி மக்கள் அபிவிருத்தி நிறுவனம் (TPDF Canada)  வெளிப்படுத்தியுள்ளது. அந்த வரவு – செலவு விவரங்களையும் இங்கு தருகின்றோம்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.