யாழில் சீரற்ற வானிலை காரணமாக 66 குடும்பங்கள் பாதிப்பு!
யாழ்ப்பாணத்தில் காற்றின் தாக்கம் காரணமாக 66 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பணிப்பாளர் தெரிவித்தார்
அம்பன் சூறாவளியின் தாக்கமானது நாட்டின் பல்வேறுபட்ட பகுதிகளிலும் உணரப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் காற்றின் வேகமானது உயர்வாக உணரப்பட்டுள்ளது
யாழ்ப்பாண மாவட்டத்தை பொருத்தவரை காற்றின் தாக்கத்தின் காரணமாக 66 குடும்பங்களைச் சேர்ந்த 229 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமை பிரிவிற்கு அறிக்கையிடப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் என்.சூரிராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த 17 மற்றும் 18 ஆம் திகதி வீசிய காற்றின் தாக்கத்தின் காரணமாக குறித்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிலும் குறிப்பாக நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த 14குடும்பங்களைச் சேர்ந்த 54 அங்கத்தவர்களும் உடுவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 அங்கத்தவர்களும் நல்லூர் பிரதேச செயலகத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று அங்கத்தவர்களும் பருத்தித்துறை பிரதேசசெயலகத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 166 குடும்பங்களுமாக மொத்தமாக 66 குடும்பங்களைச் சேர்ந்த 229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த காற்றின் தாக்கத்தின் காரணமாக 47 வீடுகள் இதுவரை பகுதியளவில் சேதமடைந்துள்ளன. மேலும் ஓரிரு நாட்களுக்கு குறித்த காற்றின் தாக்கமானது கூடுதலாக காணப்படுவதன் காரணமாக கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டவியல் திணைக்களத்தினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக மீனவர் சமூகத்தினர்விழிப்பாக செயற்படுமாறும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது
காற்றின் தாக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை