ஆய்வு ஒன்றினை முன்னெடுக்க கல்வி அமைச்சு தீர்மானம்!
அரச பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பமான இடங்களையும் கற்பிப்பதற்கான பாடங்களையும் கண்டறிய ஆய்வு ஒன்றை நடத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
அதற்காக https//moe.gov.lk இல் “Teacher Survey Form” அல்லது https://nemis.moe.gov.lk என்ற இணைய முகவரிக்குள் பிரவேசித்து கணக்கெடுப்பு படிவத்தை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு கூறப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி, எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் வினா கொத்தை நிறைவு செய்ய வேண்டும் என கல்வியமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
கருத்துக்களேதுமில்லை