கொவிட் – 19 இன் தாக்கத்தால் வவுனியாவில் சிரட்டை கைத்தொழிலாளர்கள் பாதிப்பு…

கொவிட்- 19 இன் தாக்கம் காரணமாக வவுனியாவில் சிரட்டை கைத்தொழிலாளர்கள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

வவுனியா, பூம்புகார் கிராமத்தில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றிடம் பெற்ற பயிற்சிகளை அடிப்படையாக கொண்டு 20 குடும்பங்கள் சிரட்டை கைத்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

வீட்டில் பயன்படுத்தப்படும் தேங்காயில் இருந்து பெறப்படும் கழிவு சிரட்டைகளைப் பயன்படுத்தி பூ, கடவுளர் உருவம், உண்டியல், இதயம் உள்ளிட்ட பல்வேறு அலங்காரப் பொருட்களை உறப்பத்தி செய்து வந்தனர். அதனை வவுனியா நகரில் விற்பனை செய்து அந்த வருமானத்தின் மூலம் தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்தினர்.

ஆனால், தற்போது கொவிட்-19 இன் தாக்கம் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம், சுற்றுலா பயணிகளின் வருகையின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இப் பொருட்களுக்கான கேள்வி குறைவடைந்துள்ளது. இதனால் சிரட்டை கைத்தொழிலாளர்கள் அத் தொழிலை கைவிட்டு வாழ்வாதாரத்திற்காக போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி தமது வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டும் என்பதே அந்த மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்