“அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை”திலும் அமுனுகம!
ஜே.எப்.காமிலா பேகம்
நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது குறித்து, அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதியமைச்சருமான திலும் அமுனுகம தெரிவிக்கின்றார்.
கண்டியில் இன்று(20) புதன்கிழமை நடந்த ஊடக சந்திப்பில் பேசிய போதே, அவர் இந்த விடயத்தை வெளியிட்டார்.
தொடர்ந்து அங்கு பேசிய அவர், வழக்குகள் ஏதும் இன்றி நீண்டகாலமாக தடுப்பில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை விடுவிப்பதுகுறித்து அரசாங்கம் விரைவில் முடிவொன்றை எடுக்கும் என்று கூறினார்.
கருத்துக்களேதுமில்லை