கடத்தல்கள் உண்மையாக நடக்கவில்லை என்பதைக் காட்ட ராஜிதவின் ஊடக சந்திப்பு உதவும் – ரஞ்சன்
முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் முன்னெடுக்கப்பட்ட வெள்ளை வான் ஊடக சந்திப்பு, உண்மையான கடத்தல்கள் நடக்கவில்லை என்பதைக் காட்ட உதவும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விடயம் குறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், வெள்ளை வான்களைப் பயன்படுத்தி நடந்த உண்மையான கடத்தல்கள் பொய்யானவை என்பதைக் காட்ட இந்த சம்பவம் பயன்படுத்தப்படும் என்பதால் அவர் அதைச் செய்திருக்க கூடாது என்றும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு யுத்தத்தில் எந்தவொரு பங்கும் இல்லை எனக் கூறி உண்மையை மறைக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இவ்வாறு உண்மையை மறைக்க அரசாங்கம் முற்படுவதனால் எந்த நன்மையையும் கிடைக்கப்போவதில்லை என தெரிவித்த அவர் தொடர்ச்சியாக இவ்வாறு பொய்களை கூறி அரசாங்கம் தனது சுயரூபத்தை இழந்துவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு கொரோனா வைரஸ் தொற்றுநோய் நல்லாட்சி ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டிருந்தால் கடந்த அரசாங்கம் எவ்வாறு கையாண்டிருக்கும் என ஊடகவியலாளர்கலினால் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போதைய சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியை விட சிறந்த சுகாதார அமைச்சராக இருந்ததால் ஒரு சிறந்த முடிவினை எடுத்திருப்பார் என்று அவர் குறிப்பிட்டார்.
கருத்துக்களேதுமில்லை