ஈழ சினிமா படைப்பாளிகளுக்கான பயிற்சிப் பட்டறையில் இணைந்துகொள்ள அழைப்பு

ஈழ சினிமாத்துறையை தொழில் மயப்படுத்தும் நோக்குடன், இலங்கை மற்றும் இந்திய தேர்ச்சியாளர்களால் விரிவுரையாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், குறித்த பயிற்சியில் இணைந்து கொள்ள paddarai.org (பட்டறை) எனும் இணையத்தளத்தை அணுகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஈழ சினிமாவிற்கென்று ஒரு பெரும் வரலாறு அதன் பக்கங்களில் பதிக்கப்பட்டிருக்கின்றது. இருப்பினும் இன்றளவிலும் சினிமாத்துறையை தொழில் மயப்படுத்த முடியாமல் குடிசைத்தொழில் போன்றே தன்னார்வலர்களாக தமது படைப்புக்களை படைப்பாளிகள் முன்னெடுத்துச்செல்கின்றனர்.

தொழில் மயப்படுத்த முடியாமல் போனதற்கு மிக முக்கிய விடயமாக நாம் பார்ப்பது இரண்டு விடயங்கள்.
1. எம்மிடம் திரைப்படத்துறைசார் போதிய கற்கை இல்லாமை.
2. அதனைச் சந்தைப்படுத்தும் முறைகள் பற்றிய தெளிவு இல்லாமை.

அந்தவகையிலே தன்னாலர்வலாக இணைந்து உருவாக்கப்பட்ட இவ்வமைப்பானது paddarai.org (பட்டறை) என்கின்ற இணையத்தளம் வாயிலாக சினிமா சார்ந்த விடயங்களையும் வேலைகளையும் முன்னெடுக்க ஆரம்பித்துள்ளோம்.

மே மாதம் 16 ஆம் திகதியன்று ஆரம்பமான பட்டறை-2 எனும் தொடரில் 1000ற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றிருந்தன.
இங்கு சினிமாவில் உள்ள மிக முக்கிய துறைகளில் 15 துறைகள் பற்றிய விடயங்கள், அத்துறைசார் இலங்கை மற்றும் இந்திய தேர்ச்சியாளர்களால் விரிவுரையாற்றப்படுகிறது.

ஒவ்வொரு சனி , ஞாயிறு தினத்திலும் இரவு 7-9 மணிவரை இடம்பெறும் இவ்வகுப்புக்களில் இணையவழியில் முற்பதிவு செய்தவர்கள் இணைந்து கொள்ள முடியும்.
இந்த தொடரில் இணைந்துகொள்ளமுடியாதவர்கள் அடுத்துவரும் தொடர்களோடு இணைந்து கற்றுக்கொள்ளவும் பயணிக்கவும் முடியும். இத்தகைய முயற்சிகள் அனைவராலும் பெரிதும் வரவேற்கப்பட்டுவருகின்றன.

இக்கொள்ளைநோய்க் காலத்தை துறை சார் அறிவுகளில் விருத்தியடைய இவ்வாறும் பயன்படுத்தலாம் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.
மேலதிக துறைசார் விபரங்களை அவர்களுடைய http://paddarai.org/ இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.