முல்லைத்தீவிலிருந்து தேர்தல் ஆணையாளருக்கு அவசர கடிதம் – சமூக ஆர்வலர் பீற்றர் இளஞ்செழியன்

முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகந்தன் அவர்களை காரணம் இன்றி தேர்தல் காலத்தில் இடமாற்றம் செய்வதை நிறுத்தகோரி தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் தேர்தல் ஆணையாளருக்கு முகவரியிட்டு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இக் கடிதத்தில், காரணமும் இன்றி விசாரணையும் இன்றி முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகந்தன் அவர்களின் இடமாற்றத்துக்கு பின்னணியாக அரசியல் சூழ்ச்சி இருப்பதை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், கொவிட் – 19 வைரஸ் தொற்று நோய் முல்லைத்தீவு மாவட்டம் முழு கட்டுப்பாட்டில் உள்ள நேரத்தில் திடீரென இவ் இடமாற்றம் செய்வது முல்லைத்தீவு மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிபோடுமோ எனும் கேள்வியும் எழுப்பியுள்ளது எனவும் நீதியான சுதந்திரமான பொதுத்தேர்தல் நடைபெற உடன் இவ் இடமாற்றத்தை இரத்து செய்ய பரிந்துரை செய்யுமாறு அவ் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெருவித்த அ.ஜெ. பீற்றர் இளஞ்செழியன் இவ் இடமாற்றமானது வைத்திய கலாநிதி சுகந்தன் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசியல் செல்வாக்கில் இவ் இடமாற்றம் நடைபெறுவதாகவே கருதுகின்றேன்.

கொவிட் 19 வைரஸ் தொற்று நோயில் இருந்து முல்லைத்தீவு மாவட்டம் முழுக் கட்டுபாட்டி உள்ளதை யாவரும் அறிந்த விடயம். இதில் பெரும் பங்காற்றிய பணிப்பாளனை காரணம் இன்றி ஒரு துளி விசாரணையும் இன்றி திடீர் இடமாற்றம் செய்வது கேலிக்குரிய விடயமாகும்.

அதே போல் இவ் கொவிட் 19 வைரஸ் பரவும் இவ் காலத்தில் தற்போதைய பணிப்பாளருக்கு பதிலாக வரவிருப்பவர் கிழமையில் இரண்டு நாட்கள் மட்டுமே பணிபுரிவார் என அறியமுடிகின்றது.

ஆகவே இவ் இடமாற்றம் இரத்து செய்யாவிடின் நீதிக்காக வீதியில் இறங்கி போராடவும் தயார் எனவும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.