சர்வதேச அழுத்தம் இல்லாவிட்டால் இந்த நாட்டில் தமிழ் இனம் இல்லாதொழிக்கப்படும் – சாள்ஸ் நிர்மலநாதன்

சர்வதேசத்தின் அழுத்தமோ அல்லது வல்லரசு நாடுகளின் அழுத்தமோ இலங்கை மீது பிரயோகிக்கப்படாவிட்டால் இலங்கையில் தமிழ் மக்கள் இல்லாதொழிக்கப்படுவார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இந்த நாட்டில் இடம்பெற்ற யுத்த குற்ற மீறல்கள் தொடர்பாக சர்வதேச நாடுகளோ சர்வதேச அமைப்புக்களோ தங்கள் மீது அழுத்தங்களை பிரயோகித்தால் தாங்கள் அந்த அமைப்பில் இருந்து விலகுவோம் என்று ஜனாதிபதி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறாக நாட்டின் ஜனாதிபதி தமிழ் மக்களுக்கு அதிர்சியூட்டும் விதமாக கருத்துக்களை பகிரங்கமாக தெரிவித்துள்ளார். 2009 ஆண்டு இடம் பெற்ற யுத்த குற்றமாக இருக்கலாம் எதிர்காலத்தில் இலங்கையில் தமிழர்கள் கெளரவமாக வாழ்வதற்கு தேவையான அரசியல் யாப்பு மாற்றமாக இருக்கலாம். ஒட்டு மொத்த தமிழர்களும் எதிர்பார்த்து நிற்பது அவை அனைத்திற்குமான தீர்வு சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாக இது இடம் பெறவேண்டும் என்பதே.

அப்படி தமிழ் மக்கள் எதிர்பார்த்துள்ளபோது ஜஸ்மின் சூக மற்றும் நவனீதம் பிள்ளை, கனடா பிரதமர் மற்றும் இந்தியாவில் இருக்கின்ற முக்கிய அமைச்சர்களும் தமிழர்களுடைய அழிப்பு சம்மந்தமாக நினைவூட்டல்களை இலங்கைக்கு தெரிவித்துருக்கின்றார்கள். அவர்களில் சிலர் வெளிப்படையாகவும் சிலர் மறைமுகமாக தெரிவித்திருந்தாலும் அதை முற்றுமுழுதாக எதிர்கின்ற வகையில் நாட்டின் ஜனாதிபதியின் கருத்து அமைந்திருகின்றது“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.