எதிர்கட்சித் தலைவர் இல்லம் மீண்டும் சஜித்திற்கு: கோட்டாவின் வெகுமதி?

ஜே.எப்.காமிலாபேகம்-ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது பயன்படுத்திய இலக்கம் 30 என்கிற எதிர்கட்சித் தலைவரது அலுவலகம் தற்போது எதிர்கட்சித் தலைவருடைய இல்லமாக பெயர் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி அந்த இல்லம் தற்போது சஜித் பிரேமதாஸவுக்கே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் பல ஆண்டுகளாக எதிர்கட்சித் தலைவராக இருந்தவர்கள் இதனை எதிர்கட்சித் தலைவரது அலுவலகமாகப் பயன்படுத்திவந்தனர்.

இந்நிலையில், சஜித் பிரேமதாஸவுக்கு இந்த எதிர்கட்சித் தலைவரது இல்லம் என்று பெயர் மாற்றப்பட்ட இல்லத்தை வழங்குவதற்கான அமைச்சரவை யோசனை கடந்த 2ஆம் திகதி அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டு அங்கீகாரமும் பெறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்