ஐ.நாவின் சட்டவிதிகளை மீறியே அஞ்சலி நிகழ்வு தடுக்கப்பட்டது! நொண்டிச்சாட்டுக்கு கொரோனா என்கிறார் சிறிதரன்
இறந்தவர்களை நினைவு கூருவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற ஐ.நா. வின் சட்ட விதிகளை மீறி இலங்கை அரசு கொரோனா என்ற நோயை காரணம் காட்டி முள்ளி வாய்க்கால் நிகழ்வை தடை செய்வதாக அமைந்துள்ளதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
போரின் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூரும் வகையில் அண்மையில் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற வணக்க நிகழ்வில் கலந்து கொள்ளும் பொருட்டு முள்ளிவாய்க்காலுக்குச் சென்று அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இறந்த ஆத்மாக்களுக்கான அஞ்சலி நிகழ்வில் கலந்த கொள்ள விடாது. தொடர்ச்சியாக தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.
2015ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் கொண்டு வரப்பட்ட 40.01 தீர்மானத்தின் பிரகாரம் இறந்தவர்களை நினைவு கூருவதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற சட்ட விதிகளை மீறி இலங்கை அரசு கொரோனா என்ற நோயை காரணம் காட்டி தடை செய்வதாக அமைந்துள்ளது.
கொழும்பில் வெற்றி விழாக்களை கொண்டாட முடியும். கூட்டங்களை நடாத்த முடியும் என்றால் தமிழர்கள் ஏன் தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை