நாளை இரவு முதல் செவ்வாய்கிழமை வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு
நாடளாவிய ரீதியில் நாளை(சனிக்கிழமை) இரவு முதல் எதிர்வரும் செவ்வாய்கிழமை வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாளை இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ள ஊரடங்கு எதிர்வரும் செவ்வாய்கிழமை அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.
அத்துடன், கொழும்பு மற்றும் கம்பஹாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மறுஅறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை