5000 ரூபாய் கொடுப்பனவை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுக்கவில்லை – மகிந்த தேசப்பிரிய
அரசாங்கத்தின் 5000 ரூபாய் நிதி உதவியை நிறுத்துமாறு தாம் ஒருபோதும் வேண்டுகோள் விடுக்கவில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
எனினும் 5000 ரூபாய் கொடுப்பனவு தொடர்பான குற்றச்சாட்டுகள் அரசியல் தன்மை கொண்டவையாக காணப்பட்டதால் குறிப்பிட்ட திட்டத்தினை அரசியல் கட்சியோ வேட்பாளரோ தனது பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதற்கு அனுமதிக்கவேண்டாம் என்றே அதிகாரிகளிற்கு உத்தரவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரசினால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களிற்கு வழங்கப்படும் கொடுப்பனவையே இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இந்தநிலையில் ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை