கொழும்பில் நிர்க்கதிக்குள்ளான மேலும் இரண்டாயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு!
ஊரடங்கு சட்டத்தினால் கொழும்பில் நிர்க்கதிக்குள்ளான மேலும் இரண்டாயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு தெற்கு பொலிஸ் பிராந்தியத்தில் தற்காலிகமாக தங்கியிருந்தவர்களே இவ்வாறு நேற்று சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளை சேர்ந்தவர்கள் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நாரஹென்பிட்டி சாலிகா மைதானத்திற்கு வரவழைக்கப்பட்ட இவர்கள், சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 40 பேருந்துகளில் இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
சொந்த ஊருக்கு சென்றதன் பின்னர், சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது தொடர்பில் இவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை