சீரற்ற வானிலை – 20 ஆயிரத்து 265 பேர் பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 5 ஆயிரத்து 356 குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்து 265 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனர்த்தங்களினால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 4 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், 142 குடும்பங்களை சேர்ந்த 608 பேர், தெரிவுசெய்யப்பட்ட 34 பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த நாட்களில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 21 வீடுகள் முழுமையாகவும், 2 ஆயிரத்து 150 வீடுகள் பகுதி அளவிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.