சாரதிகளின் அனுமதிப் பத்திரங்களுக்கான கால எல்லை நீடிப்பு!

சாரதி அனுமதிப்பத்திரங்களின் காலத்தைத் தற்காலிகமாக நீடிக்கப் போக்குவரத்து சேவைகளின் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய குறித்த காலஎல்லை எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக, ஏப்ரல் 16ஆம் திகதியுடன் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான செல்லுபடியாகும் காலம் மே 31 வரை நீடிக்கப்பட்டது.

இருப்பினும், நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மே 31ஆம் திகதியுடன் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான செல்லுபடியாகும் காலம் ஜூலை 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்