பெற்றோல் விலையில் திடீர் மாற்றம்
ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை லங்கா ஐ.ஒ.சி நிறுவனம் ஐந்து ரூபாவால் குறைத்துள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) முதல் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக லங்கா ஐ.ஒ.சி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, லங்கா ஐ.ஓ.சீ நிறுவனத்தின் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 137 ரூபாய் ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலைக்கு சமமாக லங்கா ஐ.ஓ.சி பெற்றோல் லீற்றரின் விலையும் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை