தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த மேலும் 41 பேர் வீடுகளுக்கு திரும்பினர்
இலங்கை விமானப்படையின் கண்காணிப்பின் கீழ் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 41 பேர் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
அவர்கள் குறித்த தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இன்று (சனிக்கிழமை) காலை அங்கிருந்து வெளியேறியுள்ளனர் என விமானப்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் தனிமைப்படுத்தலை நிறைவு செய்தமைக்கான சான்றிதழ்களும் இதன்போது அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
வெலிசர பகுதியில் உள்ள தனிமைப்படுத்தல் முகாம்களிலேயே இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
கருத்துக்களேதுமில்லை