இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை தாண்டியது

இலங்கையில் இதுவரை 51 ஆயிரத்துக்கு 94 பேருக்கு கொரோனா வைரஸை கண்டறியும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நேற்று (வெள்ளிக்கிழமை) மாத்திரம் இந்தப் பணியகத்தினால் 1,970 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவே நாள் ஒன்றுக்கு மேற்கொள்ளப்பட்ட அதிகளவிலான பரிசோதனை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த ஏப்ரல் 27ம் திகதியன்று ஆகக்கூடுதலாக பணியகத்தினால் 1869 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.