குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 660 ஆக அதிகரிப்பு
கொரோனா தொற்று உறுதியாகி தற்போது குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 660 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
33 கடற்படையினர் உள்ளிட்ட மேலும் 40 பேர் குணமடைந்த நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்தோடு தொற்று உறுதியாகியவர்களில் 283 கடற்படையினர் இதுவரை குணமடைந்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனா தொற்று உறுதியாகிய 1068 பேரில் 399 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை