செவ்வாய்க்கிழமை முதல் மாகாணங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளை இயக்க திட்டம்

சுகாதார பிரவினரின் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் உடனடியாக மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் மாகாணங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளை இயக்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்

இதேவேளை, மாகாணங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் தொடர்பாக போக்குவரத்து அமைச்சருக்கு ஒரு திட்டம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் இதற்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் உடனடியாக மாகாணங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.