குழந்தைகள் மத்தியில் புதிய வகை நோய்

குழந்தைகள் மத்தியில் புதிய வகை நோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபல் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கவாசகி (Kawasaki) என்ற நோய் குழந்தைகள் மத்தியில் தற்போது பரவுவதால், பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நோய் ஏற்கனவே இருந்தாலும் தற்போது கொரோனா தொற்றுக்கு மத்தியில் மேற்கத்தேய நாடுகளில் தற்போது குறித்த நோய் வேகமாக பரவியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது இலங்கையிலும் இவ்வாறான நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த நோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாத போதிலும் அவதானமாக இருக்க வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் தீபல் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.