பங்களாதேஷிலிருந்து 276 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
பங்களாதேஷில் சிக்கியிருந்த 276 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
டாக்கா விமான நிலையத்திலிருந்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1.50 அளவில் இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இவர்கள் யூ.எல் – 1423 ரக விமானத்தில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வருகைத் தந்தவர்களும் அவர்களின் உடமைகள் அடங்கிய பைகளும் கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
அதன் பின்னர் குறித்த அனைவரும் இராணுவத்தின் உதவியுடன் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை