அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் – மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தில் அவர்களின் அனுமதியின்றி பிடித்தம் செய்தமை தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறிப்பாக அரசதுறை அதிகாரிகள் குறித்து தங்களுக்கு அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிக உடகம தெரிவித்துள்ளார்.

மாகாணமட்டத்தில் உள்ள அதிகாரிகள் அரசாங்க ஊழியர்களை கொவிட் 19 நிதியத்திற்கு நிதி உதவி வழங்குமாறு கோருவது குறித்தும் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்