இன்றுமட்டும் 05 பேருக்கு கொரோனா வைரஸ் – தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி இன்றுமட்டும் 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,094 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 411 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 97 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதேவேளை இன்றுமட்டும் மேலும் 14 பேர் குணமடைந்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 674 ஆக அதிகரித்துள்ளது .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.