ஊரடங்கு தளர்த்தப்படுகின்றது என்பதற்காக ஒருபோதும் பாதுகாப்பை குறைக்ககூடாது என வலியுறுத்து!

நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்படுகின்றது என்பதற்காக ஒருபோதும் பாதுகாப்பை குறைக்ககூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

காதார சேவைகள் துணை இயக்குநர் பபா பலிகஹவதன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் துறையினருக்கு என கடந்த 11ஆம் திகதி வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் நாளை ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் நாடு முழுவதிலும் நடைமுறைக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் தங்கள் அலுவலகங்களிற்கு கொரோனா வைரசிற்கு முன்னர் காணப்பட்ட சூழ்நிலையில் பணிக்கு சென்றமை போன்று நாளையும் பணிக்கு செல்லவேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பணியாளர்கள் அலுவலகத்திற்குள் நுழைவதற்கு முன்னர் கைகளைகழுவுதல், பணிநேரத்தின்போது முகக்கவசங்களை அணிந்திருந்தல், போக்குவரத்தின் போது பாதுகாப்பான இடைவெளியை பேணுதல் போன்றவற்றினை பின்பற்றவேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊரடங்கினை அரசாங்கம் தளர்த்தினாலும், நாட்டில் இயல்புநிலை ஏற்பட்டாலும் ஒரு நிமிடம் கூட நாங்கள் எச்சரிக்கையை கைவிடக்கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.