காட்சிகள் தேர்தல் தொடர்பாக இன்னும் நிலைப்பாட்டினை அறிவிக்கவில்லை – மஹிந்த தேசப்பிரிய

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சத்திற்கு மத்தியில் தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது குறித்த கருத்தை தெரிவிக்குமாறு கோரியிருந்தபோதும் ஒருவர்கூட இன்னும் பதிலளிக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுத்தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சிகளையும் தங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழு சார்பாக வேண்டுகோள் விதிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இருப்பினும் இந்த விடயம் குறித்து தங்களின் நிலைப்பாட்டினை அரசியல் கட்சிகள் சமர்ப்பிக்கவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.