குழந்தைகள் மத்தியில் பரவும் கவசாக்கி நோய் குறித்து அச்சம் கொள்ளத்தேவையில்லை

குழந்தைகள் மத்தியில் பரவுவதாக தெரிவிக்கப்படும் கவசாக்கி நோய் தொற்று குறித்து தேவையற்ற பயத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள சூழலில், குழந்தைகள் மத்தியில் பரவுவதாக தெரிவிக்கப்படும் கவசாக்கி நோய் தொற்று குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் கவசாக்கி நோய் தொற்று குறித்து எந்தவித அச்சமும் கொள்ளத்தேவையில்லை என குழந்தைகள் நோய் தொடர்பான விசேட வைத்தியர் அனுருத்த பாதெனிய தெரிவித்துள்ளார்.

இந்த நோய் கடந்த 20 வருடங்களுக்கு மேல் நாட்டில் காணப்படுவதாக தெரிவித்த அவர், தற்போது குறைந்தளவான நோயாளிகளே இந்த நோய் தொற்றுக்கு உள்ளாகி வருவதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்த நோய் நாட்டின் பல பகுதிகளில் பரவி வருவதாக கண்டி வைத்தியசாலையின் உடலியல் நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் டபிள்யூ.கே.குலரத்ன தெரிவித்துள்ளார்.

அதேபோல் எலி காய்ச்சலுக்கான அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியான அரச மருத்துவமனைகளை நாடி சிகிச்சை பெறுமாரு அவர் கேட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.