சீஷெல்ஸ் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமையவே 35 அந்நாட்டு பிரஜைகள் அழைத்துவரப்பட்டனர்!
35 சீஷெல்ஸ் பிரஜைகளை இலங்கையில் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த அனுமதி தருமாறு அந்நாட்டு அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமையவே அவர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களாக தற்போது அதிகம் அடையாளம் காணப்படுபவர்கள் வெளிநாடுகளில் இருந்து அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் என சுகாதார அமைச்சின் தரவுகள் குறிப்பிடுகின்றன.
இந்நிலையில், சீஷெல்சிஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வைத்திய பரிசோதனைக்காக என்று கூறப்பட்டுவந்துள்ள 35 சீஷெல்ஸ் பிரஜைகள் குறித்து பல்வேறு அச்சமும் சந்தேகமும் மக்கள் மத்தியில் எழுந்திருந்தது.
எனவே சீஷெல்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்தவர்கள், இலங்கைப் பிரஜைகள் அல்ல எனவும் அவர்கள் 35 பேரும் சீஷெல்ஸ் நாட்டுப் பிரஜைகள் எனவும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ஜயநாத் கொலம்பகே உறுதிப்படுத்தியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை