மேலும் 07 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!
குவைத்தில் இருந்து நாடுதிரும்பிய மேலும் 07 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,148 ஆக அதிகரித்துள்ளது.
அத்தோடு கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 21 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கையும் 695 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது கொரோனா தொற்று உறுதியாகியவர்களில் 444 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை