கொழும்பு பேராயரை சந்தித்தார் சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி

சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சிக்கும் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகைக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பு, ஆயர் இல்லத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை)  இந்த சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது, கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பாக பேராயர் அமைச்சரிடம் கேட்டறிந்துக் கொண்டார்.

அத்தோடு, சமூகத்தில் வைரஸ் பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை முன்னிட்டு அரசாங்கத்துக்கு பேராயர் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை நன்றிகளையும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் சில முக்கிஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்