கட்சி அதிகாரத்திற்கு ஆசைப்பட்டே திட்டமிட்ட வகையில் சஜித் பிரேமதாஸ ஒதுக்கப்பட்டார் – நளின் பண்டார
கட்சி அதிகாரத்திற்கு ஆசைப்பட்டே, திட்டமிட்ட வகையில் சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டார் என சஜித் ஆதரவாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கத்தின் தேவைகளும் ரணில் விக்கிரமசிங்க தரப்பினரின் தேவைகளும் என்ன என்பது நன்றாகத் தெரிகிறது.
தங்களின் கட்சிகளில் அதிகாரத்துக்கு வரவே இந்த இரண்டுத் தரப்பினரும் முயற்சித்து வருகிறார்கள். சஜித் பிரேமதாஸவை ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேற்றினார்கள்.
இதற்கு மூளையாக இருந்து செயற்பட்டவர்கள், இன்று கட்சியின் உயர்பதவிகள் தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டு வருகிறார்கள். நாம் இவ்வாறாவர்கள் தொடர்பாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.
இவர்களின் முகத்திரையைக் கிழித்துதான் நாம் சிறிகொத்தவிலிருந்து வெளியேறினோம்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை