ஜனகனின் எண்ணக்கருவில் VJ Digital Uni உதயமாகின்றது
கல்வியில் பின்னடையும் எதிர்காலச் சந்ததியின் நிர்க்கதி நிலையைக் கருத்திற்கொண்டு, ஜனகனின் எண்ணக்கருவில் புதிய இணையவழிக் கல்வித் தளமொன்று அறிமுகப்படுத்தப்படுகிறது.
‘VJ Digital Uni’ என்னும் இந்த இணையவழிக் கல்வித்தளத்தை, ஜனநாயக மக்கள் முன்னணியில் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசனின் பங்குபற்றுதலுடன், ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான வி.ஜனகன், உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.
இந்த இக்கட்டான காலகட்டத்தில் இணையவழி கற்றலை மேம்படுத்த IDM Nations Campus கல்வி நிறுவனமானது ‘VJ Digital Uni’ உடன் இணைகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட படிப்புகளுக்கு எந்தச் செலவும் இன்றி, மிகவும் தகுதிவாய்ந்த கல்வித் தளத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், குறிப்பாக பின்தங்கிய மாணவர்களின் தொடர்கற்றல் நடவடிக்கை நிறுத்தப்படாமல் தடுக்கப்படுகிறது.
‘VJ Digital Uni’ இன் ஸ்தாபகர் கலாநிதி வி. ஜனகன், இந்தக் கடினமான காலங்களில் IDM Nations Campusஇன் நிர்வாக குழு அளித்த மகத்தான ஆதரவுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
உலகெங்கிலும் நிலவும் திடீர் கொவிட் -19 நோயின் தாக்கத்தால் ஏட்டுள்ள அசாதாரண நிலை, பல மாணவர்களுக்கு ஒரு சோதனை நேரமாக இருக்கலாம்.
ஆனால், மிகுந்த அர்ப்பணிப்புடன் தங்கள் இலக்கை நோக்கி உழைப்பதன் மூலம் அதைத் தங்கள் நன்மைக்காகப் பயன்படுத்தினால் ‘இணையவழி கற்றல்’ ஒரு வெகுமதியாகவும் இருக்கும். இருப்பினும், இலங்கையில் பிரபலமடைந்து வரும் ‘இணையவழி கற்றல்’ எனப்படும் இந்தப் புதிய கட்ட கல்வியில் தவிர்க்க முடியாத பல பிரச்சினைகள் இருக்கின்றன.
IDM Nations Campus இன் தலைமை நிர்வாக அதிகாரி வி. ஜனகன், கல்வி நிர்வாகத்தில் 18 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ளவர். தன் அனுபவத்தினூடாக இதுபோன்ற இணையவழி கற்றலை மேலும் பாதிக்கும் சில வற்றாத பிரச்சினைகள் இருப்பதை அடையாளம் கண்டுள்ளார்.
முதன்மையானது நாட்டில் உள்ள டிஜிட்டல் பிளவு மற்றும் இந்த இடைவெளியைக் குறைக்க அரசாங்கத்தால் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மேலும், கொவிட் 19 சீர்குலைவு, பல குடும்பங்களால் உணரப்படுகிறது.
இது, அன்றாட வருமானத்தில் தங்கி வாழ்பவர்களுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் இந்த Online கல்வியுடன் வளர்ந்து வரும் பொருளாதாரச் சிக்கல்களும் ஒரு முக்கியக் கவலையாக உள்ளது. மேலும், இலங்கை போன்ற ஒரு நாட்டுக்கு வரும்போது அது மோசமாகி வருகிறது.
இவ்வாறான நெருக்கடியான சூழ்நிலையிலும் ‘தரமான கல்வி அனைவருக்கும்’ என்ற தொலைநோக்குப் பார்வையைக் கொண்ட வி. ஜனகன், உண்மையிலேயே தேவைப்படும் அனைவருக்கும் இலவச Online பல்கலைக்கழக தீர்வு என்னும் ஒரு புதுமையான கல்வி அணுகுமுறையைத் தொடங்கினார். இதன் மூலம் எதிர்கால வேலைவாய்ப்பு தேவையைப் பூர்த்தி செய்யும் சர்வதேச தரங்களுடன் மாணவர்கள் தங்கள் உயர் கல்வி சாதனைகளை அடைய முடியும்.
இந்த Online பல்கலைக்கழகம் ‘VJ Digital Uni’ என்று தொடங்கப்பட்டுள்ளது. அங்கு உயர்கல்வியைத் தொடர விரும்பும் எவரும் இணையம் வழியாக இலவசமாகப் பதிவுசெய்யலாம். மற்றும் இங்கிலாந்து உட்படப் பிற சர்வதேச விருது வழங்கும் அமைப்புகளிடமிருந்து உலகத் தரம் வாய்ந்த உயர் கல்வியைப் பெறமுடியும். இது உள்நாட்டிலும் உலக அளவிலும் அங்கிகரிக்கப்பட்டுள்ளது. இந்த இணையவழி கல்வித் தளத்தின் மூலம் இந்த இக்கட்டான காலங்களில் மிகவும் தகுதிவாய்ந்த கற்கைநெறிகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், மாணவர்கள் தங்கள் கைக்குக் கிடைத்திருக்கும் நேரத்தை அதிகம் பயன்படுத்த முடியும்.
கருத்துக்களேதுமில்லை